இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மரின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே யாங்கோனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், மியான்மரில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஆதரவு தேவைப்படும் எந்தவொரு இலங்கையருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் வன்முறை அல்லது கலவர சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மியான்மரின் சக்திவாய்ந்த இராணுவம் நேற்று சதித்திட்டத்தில் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அவசரகால நிலையை அறிவித்தது, ஆங் சான் சூகி மற்றும் பிற மூத்த அரசாங்கத் தலைவர்கள் அதிகாலை சோதனைகளில் தடுத்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.