யாழ்ப்பாணம் பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.