தமிழ் தேசியத்தை ஓரளவிற்கு நாங்கள்தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இல்லையேல் தமிழ் தேசியம் எப்பொழுதோ அழிந்திருக்கும் என தெரிவித்துள்ளார் கோட்டா அரசின் யாழ் மாவட்ட பிரதானி அங்கஜன் இராமநாதன்.
கடந்த 4ஆம் திகதி காலையில் சு.க, ஆவா அணி இணைந்து தமிழ் மக்களின் நிலைப்பாடுகளிற்கு எதிராக யாழ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பின்னர், மாலையில் கட்சியின் மாநாடு நடந்தது. இதன் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைக்கு ஓரளவிற்கு தமிழ் தேசியத்தை பாதுகாப்பவர்கள் நாங்கள்தான். எங்களை போன்ற சிலர் எந்த அரசாங்கம் வந்தாலும், அதனுடன் இணைந்து மக்களின் தேவைகளை உணர்ந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறோம்.
ஆனால், சிலர் அரசியல் பிரச்சனைகளை மட்டுமே பேசி வருகிறார்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க தவறியுள்ளனர். நாங்கள் இல்லையென்றால் எப்பொழுதே தமிழ் தேசியம் அழிந்திருக்கும். ஏதோவொரு விதத்தில் நாம்தான் தமிழ் தேசியத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமையளிக்கிறது என்றார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.