Breaking News



தற்போது தென்னாபிரிக்காவில் வேகமாக பரவி வரும் உருத்திரிபடைந்த கொரோனா வைரஸ், இலங்கையிலும் கண்டுபிடிக்கப்படக்கூடும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவும் உருத்திரிபடைந்த கோவிட் 19 வைரஸ் தொடர்பில், விகாரத்தைக் கண்டறிவது குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோஹன கருத்து தெரிவிக்கையில், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பரிசோதனைகளின் மூலம் நாட்டின் 4 பகுதிகளில் இங்கிலாந்தில் பரவும் உருத்திரிபடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நான்கு பகுதிகளில் மட்டுமே இந்த மாறுபட்ட வைரஸ் பரவியுள்ளது என்ற முடிவுக்கு வரமுடியாது.

இந்த நிலைமையை தொடர்ந்து, பல புதிய நடவடிக்கைகளை எடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

தொற்றுநோய் பரவுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளதால், 1987 தனிமைப்படுத்தப்பட்ட கட்டளைச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே இறுதி சடங்குகள் மற்றும் திருமணங்களைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளையும் நடத்த அனுமதி வழங்கப்படாது.

தற்போதைய நிலமையில் உட்புற அல்லது வெளிப்புற நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.