Breaking News



தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும் , கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார் . 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது , சி.சிறிதரன் இந்த யோசனையை முன்வைத்தார் .

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும் . கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார் . இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது . அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும் . 

கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார் . முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால் அவரை களமிறக்கி  வெற்றியடைய செய்யலாம் என்றார்

இது யோசனையளவிலேயே தெரிவிக்கப்பட்டது . அப்போது , கிழக்கு உறுப்பினர் ஒருவர் “ முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது சரி . தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா ? அவர் மஹிந்த குடும்பத்தின் ஆளா இல்லையா என்ற அரசியலில் இருப்பவர்களிடமே தீரவில்லை . 

முதலில் அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் . பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என யோசிக்கலாமென்றார் . இரண்டு கருத்திற்கும் கூட்டத்தில் எதிர்வினையாற்றப்படவில்லை . 


No comments

Note: Only a member of this blog may post a comment.