Breaking News


நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் நேற்று (16) அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வவுனியா மாவட்டம் நைனாமடு பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்டவர்களின் விபரம் வருமாறு-

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலஓயா பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதான ஆண் ஒருவர், மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த சனிக்கிழமை (13) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, அவயவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான பல்வேறு சிக்கல்நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட பக்கவாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

நைனாமடு பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.