வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை விரைவில் சந்திக்க கோட்டபாய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.
“இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து அந்த குடும்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலேயே உறுதியாக உள்ளார்" என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வியாழக்கிழமை இந்திய ஊடகமான த இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் பயணமாகும். அவர் [ஜனாதிபதி] அரசியல்வாதிகள் சொல்வதைக் காட்டிலும், குடும்பத்தினரிடம் அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களின் உண்மையான குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவும் விரும்புகிறார் இது மிக விரைவில் நடக்கும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.