எம்.ஏ.சுமந்திரன் அணியினரே இந்த ஏற்பாடுகளின் ஆரம்பத்தில் மறைமுகமாக செயற்பட்டிருந்த நிலையில், முடிவிடத்தின் ஏற்பாடுகளில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளனர்.
வடமராட்சியில் இந்த போராட்ட முடிவிட ஏற்பாட்டு குழுவினராக சுமந்திரன் அணியினரே உள்ளனர்.
போராட்டத்தின் யாழ் மாவட்ட ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் இன்று நடந்தது. இதில் பொலிகண்டியில் போராட்ட முடிவிடமாக சிவாஜிலிங்கம் ஒரு இடத்தை பரிந்துரைத்தார்.
எனினும், சுமந்திரன் அணியின் பிரதேசசபை உறுப்பினர்கள் அதை நிராகரித்து விட்டனர். முடிவிடம் குறித்து தாமே தீர்மானிப்போம் என தெரிவித்து விட்டனர்.
இதேவேளை, இந்த போராட்டத்திற்கான தடையுத்தரவு யாழ் மாவட்டத்தில் வீடுகளில் உள்ள பல அரசியல் பிரமுகர்களிற்கு பொலிசாரால் வழங்கப்பட்டுள்ளது. எனினும், போராட்டத்தில் ஈடுபடும் சுமந்திரன் அணியினருக்கு தடையுத்தரவு வழங்கப்படவில்லை, இதன் பின்னணி என்ன என்றும் இன்றைய கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது
No comments
Note: Only a member of this blog may post a comment.