Breaking News



விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்குமிடையில் காடுகளினால், சேறு சகதிக்குள் பல முறை நடந்து சென்று யாழ்ப்பாணத்தில் போராடினோம். அப்போது கிடைக்காத சுதந்திரம், காரில் சுமந்திரன் சென்று, சில நகரங்களில் இறங்கி, யாழ்ப்பாணம் சென்றால் கிடைத்து விடுமா என கேள்வியெழுப்பியுளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்).

இரா.சம்பந்தனின் இடத்தை பிடிப்பதற்கான முயற்சியே இந்த நடைபயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலி தேசியவாதிகள், வேடதாரிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வந்து தமது குசும்புகளை காட்ட முனைகிறார்கள்.

பொத்துவிலில் இருந்து தொடங்கும் போது ஒரு கதை. முஸ்லிம் பகுதிகளில் ஒரு கதை. தமிழ் பகுதிகளில் ஒரு கதை. வடக்கு, கிழக்கு மாகாணசபைகளை கைப்பற்ற ஒட்டுமொத்த யாழ்ப்பாணிகளும் சேர்ந்து இறங்கியிருக்கிறார்கள்.

தமிழீழம் கிடைக்காது. வடக்கு கிழக்கு இணையாது. தலைவர் பிரகாரன் இருக்கும் போதே கிழக்கு மாகாணசபையை கைப்பற்றி செய்தும் காட்டினோம்.

மட்டக்களப்பில் ஒரு இலட்சத்தை விட குறைவான வாக்கு பெற்றதால், அதை மீள அதிகரிக்க கூட்டமைப்பினர் இந்த பேரணியை செய்கிறார்கள். அவர்களின் அரசியல் தேவைக்காக இளைஞர்கள் அவர்களின் பின்னால் போனால், அழிவை சந்திக்க போகிறவர்கள் இங்குள்ள அப்பாவிகள்தான். எல்லா யாழ்ப்பாணியும் கட்டித்து காணாமல் போயிடுவான். 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். கொஞ்சப் பேர் இதில் இணைந்து செயற்பட்டாலும், பின்னர் சீதனமாக காசை வாங்கி போய்விடுவார்கள்.

கொடுமைப்பட்ட, வறுமைப்பட்ட நீங்கள் எங்கே போவீர்கள்? காசில்லாதவர்கள் அடிபட்டு சாக வேண்டியதுதான்.

இலக்கில்லாத போராட்டங்க ஆதரிக்க முடியாது. அதனால் நீங்கள் யாரும் குழப்பமடையாமல் எம்மோடு இணைந்திருங்கள். யாழ்ப்பாணத்து ஆக்கள் கொல்ல வந்த என்னை காப்பாற்றியிருக்கிறீர்கள் என்றால், நான் சாகும் வரை உங்களுடன் நிற்பேன்.

நான் எட்டு அல்லது ஒன்பது தடவைகள் முல்லைத்தீவிலிருந்து கால் கொப்பளிக்க முள்ளேறி, யானைத்தடங்களில் சறுக்கி விழுந்து, நடந்து நடந்து கொக்குளாய் ஆற்றில் சுரி மிதித்து, சுரியில் புதையுண்டு செம்மலை சென்று யாழ்ப்பாணத்தில் போராடினேன்.

அப்போது கிடைக்காத சுதந்திரம் சுமந்தரன் பொத்துவிலில் இறங்கியும், கல்முனையில் இறங்கியும், மட்டக்களப்பில் நகருக்குள் இறங்கியும் நடந்து ஐந்து நாட்களில் யாழ்ப்பாணம் சென்றால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடுமா?. அப்படி கிடைத்தால் மகிழ்ச்சியான விடயமாகும்.

ஆனால், இது சம்பந்தனின் இடத்தைப் பிடிப்பதற்கு செய்யும் சூழ்ச்சி ஆகும். இவற்றில் எந்த ஒரு தமிழனும் சிக்கிக் கொள்ளாமல் தெளிவான சிந்தனையுடன் பயணிக்க வேண்டும்.

குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் சம்பந்தனின் இடத்தை பிடிப்பதற்கான சூழ்ச்சியில் அழிந்து போய் விடமாட்டார்கள்.அடிமையாகியும் விடமாட்டார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.