Breaking News



ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உதவி செயலாளராக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அங்கஜன் இராமநாதனின் பெயர் உதவி செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தமைக்காகவே, கட்சியினால் இந்த பதவி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த  நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், பொதுச்செயலாளராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.