இயற்கையில் சில அதிசய நிகழ்வாக மனித தோற்றத்துடன் விலங்குகள்,பறவைகள்,தாவரங்கள் என்பன தோற்றமளிக்கின்றன.
இந்தோனேஷியாவில் மனித முகத்துடன் காணப்பட்ட சுறா ஒன்று பிடிபட்டு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது.
அதனைக் கண்ட அவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்ட அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுபோன்று கடந்த காலங்களிலும் மீன்கள் மனித தோற்றத்துடன் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.