Breaking News



நாங்கள் அப்பாவிகள் என விடுதலைப் புலிகளிடம் சொல்லுங்கள் என நாடாளுமன்ற மின்தூக்கிக்குள் தனிமையில் சந்தித்த போது மேர்வின் சில்வா என்னிடம் கூறினார் என சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டவர்களின் கால்களை உடைத்திருக்க வேண்டுமென மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேர்வினின் வீரத்தை நாம் பலமுறை பார்த்து விட்டோம்.

நாடாளுமன்றத்திற்குள் எம்மை தாக்க அவர் வந்த போது, நான் முன்னால் சென்றேன். அவர் நாடாளுமன்ற பின்வாசலால் ஓடிவிட்டார்.

ஒருமுறை நாடாளுமன்ற மின்தூக்கியில் தனிமையில் சந்தித்த போது, விடுதலைப் புலிகளிடம் சொல்லுங்கள், நாங்கள் அப்பாவிகள் என கூறினார். அவரால் அதை மறுக்க முடியுமா? புத்தரின் சிலைக்கு முன்பாக அவர் சத்தியம் செய்ய தயாரா?

காசு கொடுத்து எங்கோ வாங்கிய டொக்ரர் பட்டத்தை வைத்துக் கொண்டு பைத்தியக்கார கதைகள் கதைக்கக்கூடாது. இந்த பட்டத்தை எங்கே காசு கொடுத்து வாங்கினீர்கள் என நான் அவரிடமே ஒருமுறை நாடாளுமன்றத்திற்குள் கேட்டுள்ளேன்“ என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.