நெடுங்கேணி பிரதேசத்தில் போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பொலிசார் பதிவு செய்து வருகின்றனர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணி தற்போது நெடுங்கேணி பகுதியினால் நகர்ந்து வருகிறது. தமது பகுதியால் நகரும் பேரணிக்கு ஆதரவளிக்க பெருமளவான பொதுமக்கள் நெடுங்கேணி சந்தி, அண்மித்த வீதியோரங்களில் குவிந்துள்ளனர்.
பேரணியுடன் பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்.
இவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பொலிசார் பதிவு செய்து வருகிறார்கள்.
No comments
Note: Only a member of this blog may post a comment.