புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இவ்வாறான போராட்டங்கள் ஒரு சில தரப்பினரின் குறுகிய நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், எரியும் தீயில் எண்ணெய்யை வார்ப்பதுபோல இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஏற்கத்தக்கவை என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.