எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும்.
இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு அனைவரும் வீரியமாக, ஒருங்கிணைந்த செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறது என வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டுள்ள இறுதிப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல தடைகளை தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் சற்றுமுன் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் நிறைவுற்றது.
அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக் கல் பதிக்கப்பட்ட இறுதிப்பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இறுதிப்பிரகடனத்தின் முழுமையான பகுதி இணைக்கப்பட்டுள்ளது,
No comments
Note: Only a member of this blog may post a comment.