Breaking Newsயாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளக பயிற்சியில் பயிற்சி வைத்தியராக இருந்த காலப்பகுதி. அந்த நாள் இன்னமும் நினைவில் 2014.03.08. இரவு ஒன்பது முப்பது மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து அழைப்பு பல்கலைக்கழக புகுமுக மாணவன் ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அரிவு வெட்டும் இயந்திரத்திற்குள் சிக்கி கொண்டதால் படுகாயம் அடைந்ததாகவும் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் நடைபெறுவதாகவும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்ப போகிறோம் ஆயத்தமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இரவு பதினொரு மணி கடந்திருந்தது.. கொண்டு வரப்பட்ட அவனின் வலது கை முழங்கைக்கு கீழே முற்றாக சிதைந்திருந்தது. இயந்திரம் அவனது கழுத்து பகுதியையும் அறுத்திருந்தது. கிளி வைத்தியசாலையில் அதை அவசர சீர் செய்து (Tracheostomy) ட்ரக்கியோஸ்ரமி எனப்படும் தொண்டை வழி சுவாச பாதையை அமைத்திருந்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சத்திரசிகிச்சை கூடத்தை நோக்கி ஸ்ரெச்சருடன் விரைந்தோம். உரிய பொறிமுறைகளின் பின் உயிர் காக்கும் நடவடிக்கையாக முழங்கைக்கு கீழே சிரேஸ்ட வைத்தியர் அண்ணாவுடன் இணைந்து வெட்டி அகற்றினோம்.
தொடர்ச்சியான ஒன்பது நாள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையைத் தொடர்ந்து எமது விடுதிக்கு மாற்றப்பட்டான். அவன் தேறியிருந்தான்....

                ❤️❤️    சுவேந்திரன். ❤️❤️

எப்போதும் சிரித்த முகம். அண்ணா என்றே உரிமையாய் அழைப்பான். 
"அண்ண! என்ர கையை வெட்ட முதல் ஒரு படம் எடுத்திருக்கலாமே நான் பார்த்திருப்பன் எப்பிடி இருந்த எண்டு.."
"எடுத்தனான்டா நீ டிஸ்சார்ஜ் ஆகும் போது காட்டுறன். அதுவரைக்கும் யோசிக்காம இரு" என்று தைரியபடுத்துவேன்.

விடுதியின் பக்கத்து கட்டிலில் உள்ளவர்களுக்கு உதவி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடது கையில் எழுத பழகிக்கொண்டிருப்பான். இடையிடையே வைத்தியர் அறைக்கு வந்து என்னுடன் உரையாடிக்கொண்டிருப்பான்.

ஆறு பேர் பிள்ளைகளாக கொண்ட குடும்பத்தில் இவன் ஐந்தாவது. இரண்டு அண்ணா, இரண்டு அக்கா ஒரு தம்பி. சிறுவயதிலே தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலும் உழைப்பிலும் வளர்ந்தனர். மூத்த சகோதரன் ஒருவர் மாவீரர் ஆகிவிட மற்றய இரு சகோதரர்களையும் போர் தின்றது.

தாய் மற்றும் சகோதரிகளுடன் தனித்து போன இவன் பாடசாலை கல்வி, விளையாட்டு, இதர செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கினான். படிக்கும் காலத்திலேயே பகுதி நேர வேலைகளுக்கு செல்வான். கடின உழைப்பின் பயனாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானான். அந்நிலையிலேயே வயலுக்கு வேலை சென்ற போது எதிர்பாராத விதமாக இயந்திரத்துக்குள் சிக்கி கொண்டான்.

போராடும் மனமும் தாராள குணத்துடன் சிரித்த படி இருக்கும் இவனை பலமுறை பார்த்து நான் வியந்ததுண்டு. ஏறத்தாழ ஒரு மாதம் விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வேளையில் தனது இடது கையினால் எழுதிய கவிதை ஒன்றைக் காண்பித்தான். வலது கையை இழந்து ஒரு மாத காலத்திற்குள் இடது கையால் சரளமாக எழுத ஆரம்பித்த இவ் அசுரனை பார்த்து வியந்து போனேன். 
சரி தம்பி யோசிக்காத, கவனம். கவனமா படி என்று வாஞ்சையுடன் தட்டி குடுத்தேன். ஆனால் அவனோ " அண்ணா அந்த போட்டோவ தாங்கோ பார்க்கோணும்" என்றான். இப்ப முடியாது பிறகு தாறன் நீ யோசிக்காம படி என்று கூறி சமாளித்தேன். ( உண்மையில் நான் புகைப்படம் எடுக்கவில்லை. அது மருத்துவ நெறிமுறைக்கு எதிரானதாக கருதி)

பல்கலைக்கழக காலத்திலும் அவன் விடாமுயற்சி தொடர்ந்த வண்ணமே இருந்தது. அவ்வப்போது அழைப்பினை மேற்கொண்டு அளவளாவுவான். பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டான். அத்துடனே தும்பு தொழிற்சாலை ஒன்றை சிறியளவில் ஆரம்பித்து தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் கண்டுள்ளான். இன்று இவனுக்கு கீழ்பணியார்களை அமர்த்தும் அளவுக்கு உயர்ந்துள்ளான்.. 

நேற்றைய தினம் பட்டம் பெற்ற அவனை வாழ்த்துவதற்காக அழைப்பினை மேற்கொண்ட போது நன்றி சொன்னதன் பின் அவன் கேட்டது, அண்ண! அந்த போட்டோவ இன்னும் காட்டேல்ல.. 

அத்துடன் அவன் எட்டிய மைல்கற்கள்

கல்வி தகுதி
---------------------
- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்       பொருளாதாரத்தில் பி.ஏ பட்டம் (சிறப்பு)
(2 ஆம் வகுப்பு மேல்)

- நிர்வாகத்தில் ஒரு சிறிய பகுதியிலும் நிபுணத்துவம் பெற்றான்.
மேலாண்மை பீடத்தில் பின்வரும் பாடங்கள்:
மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் திறன்கள்
வணிக மேலாண்மை
இலங்கை வணிகச் சூழல்
விளம்பர மேலாண்மை

தொழில்முறை படிப்புகள்
-------------------------------------------
Asian ஆசிய கம்ப்யூட்டர் எஜுகேஷன் லிமிடெட் (2012-13) இல் ஐடி மற்றும் வலை நிரலாக்கத்தில் டிப்ளோமா.
பாடத்திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகள் (வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட்,
இணையம், மின்னஞ்சல் போன்றவை)

வகித்த மற்றும் வகிக்கின்ற பதவிகள்
----------------------------------------------------------------
1. கிளிநொச்சி மாவட்ட றோட்றிக் கழக உறுப்பினர்.
2. பொருளாளர் , தலைவர்
யாழ் பல்கலைக்கழக பொருளாதார துறையின் இளம் பொருளாதாரர் அமைப்பு.
3. பொருளாளர்
யாழ் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றம்
4. உதவிச் செயலாளர் மற்றும் உறுப்பினர்
கோரக்கன்கட்டு தெற்கு கிராம அபிவிருத்தி சபை.

பயிற்சி மற்றும் பட்டறைகள் அனுபவங்கள்
------------------------------------------------------------------------
  1. இலங்கை அபிவிருத்தி வாரியம் (ஐடிபி) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் நடாத்திய தொழில்துறை நடத்திய "தொழில் முனைவோர் மற்றும் வணிகத் திட்ட மேம்பாடு" 

2. சாந்தி சேனா சன்சதயா  சர்வோதயா நடாத்திய "ஒன்றாக ஒரு தீர்வைக் கண்டறிதல் " எனும் தொனிப் பொருளிலான இளைஞர் பாசறை

3. கே.எம்.வி & கியூடெக் கரிட்டாஸ் நடத்திய தலைமைத்துவ அதிகாரமளித்தல் திட்டம் 

4. யாழ் பல்கலைக்கழக பாலின சமத்துவ பல்கலைக்கழக மையத்தால் நடத்தப்பட்ட "பாலின சமத்துவ திட்டம்"

5. தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் நடத்திய சிங்கள மொழி பாடத்திட்டத்தை (100 மணிநேரத்தை உள்ளடக்கியது) முடித்தது

6. தேசிய ஒற்றுமை மற்றும்
தேசிய ஒற்றுமைக்கான அலுவலகத்தால் நடத்தப்பட்ட உயர் கல்வி மூலம் நல்லிணக்கம்
மற்றும் நல்லிணக்கம் (ONUR)

7. உயர் கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட "தலைமைத்துவ குணங்கள் மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்ப்பது"
உயர் கல்வி.

8.பிரேம் ராவத் அறக்கட்டளை (2017) நடத்திய அமைதி கல்வி திட்டம் (பி.இ.டி).

9. தேசிய இளைஞர் படை நடாத்திய "பட்டாலியன் மதிப்பீட்டு முகாம்"

முயற்சியின் மொத்த உருவம் அவன்.. நல்லா இருடா தம்பி..

இந்த பதிவு uthayaseelan katkandu அவர்களது முகநூலில் இருந்து பிரதி எடுத்தது!No comments

Note: Only a member of this blog may post a comment.