Breaking News


சாவகச்சேரி தொகுதியின் அரசியல் செயற்பாட்டாளர்களான முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் க.பிரபாகரன் ஆகியோருக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் எதிர்வரும் 5ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்திற்காக ஆதரவாக 5ஆம் திகதி கொடிகாமத்தில் உணவொறுப்பு போராட்ட ஏற்பாடுளை கிஷோர், மயூரன் தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த போராட்டத்தினை முடக்கும் முகமாகவே கொடிகாமம் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பொலிஸாராலேயே குறித்த நீதிமன்ற அறிவித்தல்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

எனினும் உணவொறுப்பு போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என ஏற்பாட்டாளர்களான கிஷோர் மற்றும் மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.