தமிழகத்தில் காரில் வந்த சசிகலாவை நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து செல்பி எடுத்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையிலிருந்து சசிகலா கடந்த 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின்னர் கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனை சிகிச்சையிலும் பெங்களூரு சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார் சசிகலா.
இந்தநிலையில், இன்று காலை 7.45 மணிக்கு பெங்களூரு சொகுசு விடுதியிலிருந்து சசிகலா தமிழகம் புறப்பட்டார்.
அ.தி.மு.கவின் கொடியைக் கட்டிக்கொண்டு சாலை வழியாக காரில் வந்த சசிகலாவுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழக எல்லையில் சசிகலாவை இளைஞர் ஒருவர் துரத்தி வந்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞர் வேகமாக காரை துரத்தி வந்த நிலையில், ஒருகட்டத்தில் அவரை சசிகலாவின் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.
இதன்போது சகலாவுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென தெரிவித்ததை அறிந்த சசிகலா அவருக்கு அனுமதி வழங்கவே, இளைஞர் சசிகலாவுடன் செல்ஃபி எடுத்தாராம்.
No comments
Note: Only a member of this blog may post a comment.