வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதானவர் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து 24 கிலோகிராம் சி4 வெடிமருந்து, 5 கிலோகிராம் பி.இ வெடிமருந்து, 148 மிதிவெடிகள், 22 டெட்டனேட்டர்கள் என்பன அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.
மக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் பணியாளரான அந்த இளைஞர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியிருக்கிறார்.
அவர் வெடிமருந்தை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களிற்கு வழங்க திட்டமிட்டதாகவும், வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்புடய ஒருவருடன் தொடர்பிலிருந்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.