மீஹகாவத்த - தெல்கொட பகுதியில் பலமாக தாக்கப்பட்டு 9 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் மாற்று நடவடிக்கையாக தோஷம் நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானித்த பெற்றோர் சிறுமியை பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
பூசகரும் தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் சிறுமியை தாக்க சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணை பியகம மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பின்னர் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பூசகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.