Breaking News



மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவு, சின்ன புல்லுமலையில் சம்பவம்.

நேற்றிரவு (18/02) பத்து மணியளவில் தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தையை நள்ளிரவு 12.00 மணிக்கு தாய் எழுந்து பார்த்தபோதும் தூக்கத்திலேயே இருந்ததால் தாயும் தூங்கிவிட்டார் எனவும்,

பின்னர் இன்று (19/02) அதிகாலை 04.00 மணியளவில் மீண்டும் தாய் எழுந்து தாய்ப்பால் கொடுக்க ஆயத்தமானபோது, 
குழந்தை மயக்க நிலையிலிருப்பதையும், மூக்கு, வாய் ஆகியவற்றால் இரத்தம் வெளியாகியிருப்பதையும் அவதானித்து கணவரையும், அம்மாவையும் (குழந்தையின் அம்மம்மாவையும்) எழுப்பி விடயத்தை தெரிவித்து செங்கலடி வைத்தியசாலைக்குக் குழந்தையை கொண்டு சென்றபோது
குழந்தை ஏற்கனவே மரணமாகிவிட்டது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு பொலிசாருக்கு விடயம்  தெரிவிக்கப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன் பிரதேச மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை தொடர்ந்தார்.

தாய்ப்பால் புரைக்கேறியதால்தான் குழந்தை மரணித்திருக்கிறது என பெற்றோர் தெரிவித்தபோதும் 
குழந்தையின் பிரேதத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி குழந்தையின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தக்கரையிருப்பதை அவதானித்ததோடு 
வலது உள்ளங்கையில் பாம்பு தீண்டிய அடையாளத்தோடு வலது கை உட்பட கழுத்து மற்றும் தலையின் பின் பகுதியெங்கும் நிறமாற்றத்துக்குள்ளாகியிருப்பதையும் அவதானித்து
பாம்பு தீண்டியதால் ஏற்பட்ட மரணமே என  பெற்றோரிடம் தெரிவித்தார்.

மனது ஏற்காத மரணம் இது. 

ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.