பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை போராட்டத்தின் ஊர்திப் பவனி நாளை அதிகாலை பொத்துவிலில் இருந்து புறப்படவிருந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்ள 32 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, மற்றும் பல பாதிரியார்கள், போராட்ட ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி அமைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என 32 பேருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.