Breaking News


கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 330 ஆக உயர்ந்துள்ளது.

மரணித்தவர்களின் விபரங்கள்-

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் மூளையில் இரத்தக் கசிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 (மட்டக்குள்/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர், அவரத வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி குறைவடைதல், நீரிழிவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா காரணமான குருதி விஷமடைவு, உக்கிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மாத ஆண் குழந்தை ஒன்று, கொழும்பு பொரளை ரிஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளது. குறித்த மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதான வைத்தியர் ஒருவர், ராகமை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கும், அங்கிருந்து கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு, அவ்வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.