சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது- குறித்த மாணவி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த ஒருவடருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை குறித்த இருவரும் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயிருந்ததாகவும்
பின்னர் இருவரும் ஜீவபுர பிரதேசத்தில் அலரி விதையினை உட்கொண்டிருந்த நிலையில் காணப்படுவதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரையும் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மற்றையவர் அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.