இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தேர்தலுக்கு முன்பு புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்க உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையை மார்ச் 15ஆம் திகதி தவணையிட்டதுடன், அன்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் செயற்குழுவை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சித்தத் வெத்தமுனி மற்றும் ஓய்வு பெற்ற நடுவர்களான சலீம் மார்ஷுக், டாக்டர் பாலித கோஹோன, ரியென்சி விஜெட்டிலேஹ் மற்றும் குஷில் குணசேகர உள்ளிட்ட 12 பேர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
தற்போதைய யாப்பில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கடுமையான அரசியல் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, துணைத் தலைவர்கள் ரவின் விக்ரமரத்ன, ஜெயந்த தர்மதாச, திலக் வட்டுஹேவ மற்றும் செயலாளர் மோகன் டி சில்வா மற்றும் கிரிக்கெட் செயற்குழு மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
புதிய யாப்பை தயாரிக்கும்படி விளையாட்டு அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் தேவையான நடவடிக்கை எடுக்க மனுதாரர் கோருகின்றனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.