வலி தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட இரண்டு புராதன சைவ ஆலயங்களில் தொல்பொருள் ஆய்வு முன்னாயத்த பணிகளிற்காக அதிகாரிகள் சென்றதால் பரபரப்பான நிலைமையேற்பட்டது.
மாகியப்பிட்டி கண்ணகை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி, குளக்கரை பிள்ளையார் கோவில் பகுதிகளையே அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இது குறித்து பிரதேச மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சி.அனுசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை அவதானித்தனர்.
ராஜராஜன் சோழன் காலத்தில் கண்ணகை அம்மன் கோவில் தீர்த்தக் கேணி கட்டப்பட்டதாகவும், இராஜராஜன் கொடுத்தனுப்பிய புனித தீர்த்தம் அந்த கேணிக்குள் விடப்பட்டதாகவும் பிரதேசத்தில் ஐதீகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.