Breaking News


வவுனியாவில் பொங்கல் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பிர் கு. திலீபன் நேரடியாக சென்று விலைகளை ஆராய்ந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

வவுனியா நகர்ப்பகுதியில் முடக்க நிலை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வர்த்தக சங்க தலைவரின் வர்த்தக நிலையத்தினரும் மன்னார் வீதியில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு அருகாமையில் பொங்கல் பொருட்களை பாரா ஊர்தியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பார ஊர்தியில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகமாக காணப்படுவதாகவும் உற்பத்தி திகதி என்பன காணப்படவில்லை எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விலை கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அதிகாரிகளையும் அழைத்து வர்த்தக சங்க தலைவரின் வர்த்தக நிலையத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட குறித்த பார ஊர்தியில் சென்று பார்த்தபோது பொருட்களின் விலைகள் அதிகமாக காணப்பட்டதுடன் பொருட்களில் உற்பத்தி திகதி காலாவதி திகதி என்பன காணப்படவில்லை.

இதனை அவதானித்த விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பொருட்களை சிலவற்றை கைப்பற்றியுள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்யவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, கொரனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஒரு சில செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் தங்களுக்கு மாத்திரம் அனுமதியை பெற்று வியபாராத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கடந்த காலத்திலும் நடைபெற்றது.

இதற்குமப்பால் சில நுகர்வோர் என்னிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பாரா ஊர்தியை பார்வையிட்டபோது பொருட்கள் விலை அதிகமாக காணப்பட்டதுடன் பொருட்களு;கு உற்பத்தி திகதி காலாவதி திகதி காணப்படவில்லை என்பதனை விலை காட்டுப்பாட்டு அதிகாரிகளும் எனக்கு தெரிவித்தனர்.

இதற்குமப்பால் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஏனைய இடத்திற்கு வருகை தந்து பொருட்களை விற்பனை செய்யும் குறித்த வர்த்தக நிலையத்தின் தொழிலார்கள் முக கவசங்களை அணிந்திருக்கவில்லை. இது மக்களுக்கு பெரும் பாதிப்பாகும்.
இது மக்களுக்கு செய்யும் அநியாயம். வன்முறையில் உழைத்தல் என்பது அதனைத்தான் எனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.