கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!


“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை இப்படி கண்டித்துள்ளார், ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர் நிமல் சிறிபால  சில்வா.

நேற்று முன்தினம் (5) நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த பின்னர், யாழ் மாநகரசபை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆளும் பெரமுன தரப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை கலாய்த்து வந்ததை குறிப்பிட்டிருந்தோம்.

இதில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவருடன், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பிற்குள் ஏன் இப்பொழுது அதிக பிரச்சனையாக இருக்கிறது? உங்கள் உள்வீட்டு பிரச்சனையால்தான் மாநகரசபை பறிபோனதாக செய்திகளில் படித்தேன். ஏன் இப்படியொரு நிலைமை வந்தது?

நான் தனிப்பட்டரீதியில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரானவன். அதை விடுங்கள். ஆனால், அந்த மக்கள் நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பினர் அதற்கு பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டுமல்லவா. கூட்டமைப்பிற்குள் இவ்வளவு பிரச்சனை வருவது நல்லதல்ல. அந்த மக்களிற்காக இதை சொல்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

உடைப்பது, பிரிப்பது, குழப்புவதே எமது தாரக மந்திரம் என குழம்பிப் போயுள்ள கூட்டமைப்பினர் திருந்துவார்களா?