கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டுள்ளான்.
இச் சம்பவம் இன்று மதியம் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம்
பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில் வீட்டில் தற்கொலை
செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் உள்ள மா மரத்தில்
தூக்கிட்டே தற்கொலை செய்துள்ளார்.
சகோதரிகள் இருவர் பாடசாலைக்கு சென்றுவிட தாய் சிவில் பாதுகாப்பு
திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார் தந்தையும் கூலித் தொழிலுக்கு
சென்றுவிட்ட நிலையில் குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை
உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மயில்வாகனபுரம் கிராமத்தைச்
சேர்ந்த மாணவன் ஒருவனே தற்கொலை செய்துகொண்டுள்ளான். ஏற்கனவே கடந்த
மூன்று மாதத்திற்கு முன் இதே பாடசாலையினை சேர்ந்த தரம் 11 மாணவி ஒருவர்
தற்கொலை செய்திருந்தார்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம்
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பொலீஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.