Breaking News



புதுப்பிக்க கூடிய சக்தி மூலம் மின் உற்பத்தி என யாழ்ப்பாணத்தின் சில தீவுகளில்,சீனாவுக்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவு,நயினாதீவு, அனலை தீவு ஆகிய மூன்று தீவுகளுமே இந்த திட்டதிற்காக (இதன் பெயரால் ) சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.இதனால் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் இலங்கையையும் ,குறிப்பாக தமிழர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது இந்த முடிவு.

12 Million அமெரிக்க டாலரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த போகிறது.ஆனால் இந்த திட்டத்தின் ஊடாக தனது பாதுகாப்பு வலயத்தை அமைப்பதே சீனாவின் பிரதான நோக்கமாக இருக்க கூடும்.

நெடுந்தீவு என்பது இந்திய இராமேஸ்வரத்தில் இருந்து மிக அண்மையில் அமைந்துள்ள தீவு.முன்னைய காலத்தில் இராமேஸ்வர கோவிலில் இருந்த பெரிய மேளம் அடிக்கும் சத்தம் இங்கு நெடுந்தீவிலும் கேட்கும் என்பார்கள்.அந்த அளவுக்கு இந்தியாவில் இருந்து மிக அண்மையில் இருக்கிறது.இந்த நெடுந்தீவில் சீன ஏவுகணை எதிர்ப்பு மையம் ஒன்றை அமைக்குமாயின் நிச்சமாக இந்தியாவின் எந்த ஒரு ஏவுகணையும் சீனாவை தாக்கும் வல்லமையை இழக்கும்.

இந்த இந்திய சீன முறுகளுக்குள் யாழ்பாணமும் தமிழர்களும் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உருவாகும் .


No comments

Note: Only a member of this blog may post a comment.