கோட்டா அரசிடம் நல்ல பெயரெடுக்க பொய் கூறினார்களா அங்கஜன் தரப்பு?: குருந்தூர் மலை சூலம் உடைக்கப்பட்டதை நேரடியாக அம்பலப்படுத்திய சுகாஷ்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கோட்டா அரசிடம் நல்ல பெயரெடுக்க பொய் கூறினார்களா அங்கஜன் தரப்பு?: குருந்தூர் மலை சூலம் உடைக்கப்பட்டதை நேரடியாக அம்பலப்படுத்திய சுகாஷ்!


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஆலயத்தின் சூலம் முறித்து அகற்றப்பட்ட தகவலை மறைக்க பல தரப்பினரும் மேற்கொண்ட முயற்சி மோசமான உருட்டு பிரட்டு நடவடிக்கையென்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் நேரடியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கோட்டா அரசின் யாழ்ப்பாண பிரதானியான அங்கஜன் இராமநாதன் தரப்பின் கப்பிடல் தொலைக்காட்சி சூலம் அகற்றப்படவில்லையென பொய்யான தகவலை பரப்பியதாக க.சுகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்கு நேரில் சென்று, சமூக ஊடகம் வழியாக அங்குள்ள நிலமையை காணொலி காட்சியாக ஒளிபரப்பினார். இதில் சூலம் உடைத்து அகற்றப்பட்டமை உறுதியானது.

க.சுகாஷ் மேலும் தெரிவிக்கையில்,

“சூலம் அகற்றப்பட்டதாக வெளியான தகவல் போலியானது என கப்பிடல் தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் அது தவறானது என்பதை நிரூபித்துள்ளோம். அவர்கள் பரப்பிய தகவல் பொய்யானது.

கப்பிடல் ஊடகத்திற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறோம். உங்கள் முதலாளி அங்கஜன் இராமநாதனின் அரசியலை செய்யுங்கள். ஆனால் அவதூறு பரப்பாதீர்கள். தேர்தல் காலத்தில் ஏ.ஆர்.ஓ (அங்கஜன் இராமநாதன் ஒப்பிசர்) என்ற பட்டப்பெயர்களை கொடுத்து, வேலைவாய்ப்பை தருவதாக கூறி, பொய் சொல்லி மக்களின் வாக்கை பெறுபவர்கள் நாங்கள் அல்ல.

அரசாங்கம் வருடா வருடம் மக்களின் வரிப்பணத்தில் செய்யும் வீதி அபிவிருத்தியையும், தார் போடுவதையும் தாங்கள் செய்வதை போல பொய் பேசுபவர்கள் நாங்கள் அல்ல. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் முயற்சியினால் தேசிய பாடசாலைகளாக பல பாடசாலைகள் தர முயரும் போது, அதை நீங்களே செய்வதாக பொய்யான விளம்பரம் செய்பவர்கள் நாமல்ல.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பொய் கூறுபவர்கள் நாமல்ல.

இப்படியான பொய்களை பரப்பும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஊதுகுழல்களாக இருக்கும் கப்பிடல் போன்ற ஊடகங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் கட்டமைப்பை அழிப்பதே இவர்களின் நோக்கம்.

இந்த சூலத்தை உடைத்தவர்கள், அதை இருந்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்றார்