Breaking News


யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும்படி எனக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் தந்தவர்கள் எல்லோரும் இப்பொழுது இதில் தமக்கு தொடர்பில்லையென கொழும்பில் பலர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கிறார்கள் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பு, பல்கலைகழகங்களின் மானியங்களின் ஆணைக்குழு என்பன சொல்ல முடியாத அழுத்தங்களை தந்தன. அவற்றிற்கான ஆவணங்களும் என்னிடமுள்ளன. அவற்றை பல்கலைகழகத்திற்குள் உரிய தரப்பினரிடம் அவற்றை வெளிப்படுத்துவேன் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.