பிள்ளையானிற்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த எதிர்பார்க்கவில்லை: சட்டமா அதிபர் திணைக்களம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பிள்ளையானிற்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த எதிர்பார்க்கவில்லை: சட்டமா அதிபர் திணைக்களம்!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கவில்லை என, சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.

மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டிருந்தது.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை வழக்கு குறித்த தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.