கரவெட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் பொது மக்களால் மடக்கி பிடிப்பு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கரவெட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் பொது மக்களால் மடக்கி பிடிப்புகரவெட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

வடமராட்சி பகுதியில் பாடசாலை, பிரதேச செயலகம், கழகத்தின் பெயர்களைச் சொல்லி நிவாரணம் என்ற பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் சற்று முன்னர் அத்துளு கரவெட்டி மத்தியில் நடைபெற்றுள்ளது. கரவெட்டி மத்தி அத்துளு  J/367, 364, 366 கிராம அலுவலகர் பிரிவில் நிதி சேரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே விழிப்படைந்த பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று நிதி சேரிப்பில் ஈடுபட்ட சமயம் எங்கிருந்து வருவதாக கேட்ட போது பல்கலைக்கழகம் எனக் குறிப்பிட்ட போது சிலர் 5000/= பணமும் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர்  இவ்வாறு மோசடி நடப்பதாக தெரியவந்ததையடுத்து விழிப்படைந்த பொதுமக்களால் அப்பகுதி கிராம சேவகரூடாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் செல்வராசா விஜயகுமார் யாழ்ப்பாணம் (வயது 34) என அவரிடம் இருந்து பெறப்பட்ட அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த நபர் கடந்த கிழமை முதல் இவ்வாறான நிதி மோசடியில் ஈடுபடுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன், பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் உட்பட பலரும் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.