மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்தார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொலிசார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பிரசன்னத்துடன் இன்று மதியம் 12 மணியளவில் அவரது உடல் வவுனியாவில் எரியூட்டப்பட்டது.
No comments
Note: Only a member of this blog may post a comment.