சிலர் எனது ஒரு பக்கத்தைத்தான் பார்த்திருக்கிறார்கள்; ‘பழைய ரூபத்தை’ காட்டும்படி தேரர்கள் கேட்கிறார்கள்: கோட்டா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

சிலர் எனது ஒரு பக்கத்தைத்தான் பார்த்திருக்கிறார்கள்; ‘பழைய ரூபத்தை’ காட்டும்படி தேரர்கள் கேட்கிறார்கள்: கோட்டா!


அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நேற்று எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் ஜனாதிபதி விமர்சித்தார்.

நேற்று அம்பாறையில் நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.

“ஆம், நான் நந்தசேன கோட்டபய. இது ஒரு நல்ல பெயர். எனக்கு இரண்டு பக்கங்களும் உள்ளன. சிலர் ஜனாதிபதி நந்தசேனவை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். சில பிக்குகள், ஜனாதிபதி கோட்டபாயவாக அல்லாமல், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன். என்னால் நந்தசேனவாக ஜனாதிபதியாகவும் இருக்க முடியும்” என கூறினார்