Breaking Newsநான் முதல்வரானதும் சிங்கள ஊடகங்களில் பயங்கரமான செய்திகள் வெளிவந்தன. நாட்டை பிளவுபடுத்தும் நோக்கமுடையவர் யாழ் முதல்வராகி விட்டார் என செய்தி வெளியிட்டன. இங்கு காழ்ப்புணர்ச்சி மிக்கவர்கள் எனக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.

2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது தூய நகரம் துயரங்கள் என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு இருந்தோம். எங்களுடைய தூய்மையான கரங்களைக் கொண்டு நகரை அழகாகவும் தூய்மையாகவும் ஆக்குவது எமது நோக்கமாக இருக்கும். அதனை நிறைவேற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

என்னால் யாழ் மாநகர சபை தேர்தலின் போது 2020ஆம் ஆண்டுக்குள் யாழ் மாநகரத்தில் என்னென்ன திருத்தங்களை செய்து முடிப்போம் என்ற திட்ட வரைவை முன்மொழிந்து இருந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக எங்களுடைய கைகளில் யாழ் மாநகராட்சி கிடைக்கவில்லை. காலம் தாழ்த்தி என்றாலும் 2021 ஆம் ஆண்டு அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு எங்களுடைய திட்ட விரைவில் சொல்லப்பட்டதை செய்து முடிப்போம்.

எங்களுடைய கட்சிக்காரருக்கு கற்பனை சக்தி அதிகம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கற்பனை வரும். ஆரம்பத்தில் ரோவின் ஆள் இஎன்றார்கள். பின்னர் சுமந்திரனின் ஆள் என்றார்கள். விளையாட்டுப் போட்டியில் சித்தார்த்துடன் நின்றபோது சித்தார்த்தனுடன் சேர்ந்து விட்டேன் என்றார்கள். பின்னர் விக்னேஸ்வரனுடன் சேர்ந்து விட்டேன் என்றார்கள். அவர்களிற்கு காலத்திற்கு காலம் கற்பனை வரும்.

கற்பனை வாதிகளை பற்றி நான் பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. கற்பனை வாதிகள் என்னை கோத்தபாயவினது அல்லது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆள் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் நேற்றைய தினம் சிங்கள ஊடகங்கள் சொன்ன கருத்துக்கள் பயங்கரமானவை. நாட்டை பிளவுபடுத்தும் ஒருவர் யாழ் மாநகர முதல்வராக இருக்கின்றார் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அங்கு இனவாத ஊடகங்கள் இனவாதத்தை கக்குகின்றன. இங்கு காழ்ப்புணர்ச்சியை கொண்டவர்கள் தமது அறிவுக்கு எட்டிய விதத்தில் பேசுகிறார்கள்.

எமது திட்டங்களை அறிவித்து, அதற்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதை ஏற்றுக்கொண்டவர்கள் வாக்களித்தனர். நாம் யாரையும் ஆதரிக்கவில்லை. எமது கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்தான் வாக்களித்தனர்.

ஆனால் நல்லூர் பி்ரதேசசபை தவிசாளர் தெரிவில் எமது உறுப்பினர்கள் இருவர் ரெலோ வேட்பாளரை ஆதரித்திருந்தனர். கொள்கையை கைவிட்டு ரெலோவின் கொள்கையை ஏற்ற அவர்கள் மீது நடவடிக்கையெடுப்பது பற்றி கவனம் செலுத்துகிறோம்.

நாங்கள் ஏதேனும் ஊழல்களை கண்டுபிடித்தால் அது எமது சக உறுப்பினர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதுபோல யாழ் மாநகரசபை வாகனத்தை பயன்படுத்த போவதில்லை. ஊதியத்தையும் பெறப்போவதில்லை. முன்னாள் மேயர் கொள்வனவு செய்த விலை உயர்ந்த மடிக்கணினியை விற்று அந்தப் பணத்தை மாநகரசபைக்கு பெறலாமா என்று ஆலோசனை கேட்டு இருக்கின்றேன். ஆனால் அந்தக் கனிணியை உடனடியாக விற்க முடியாது என்ற ரீதியில் எனக்கு பதில் அளிக்கப்படுகின்றது. விற்க முடியுமாக இருந்ததால் விற்று அந்த பணத்தை மக்கள் நல திட்டங்களிற்கு பயன்படுத்துவேன்.

யாழ் மாநகரசபையில் இருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் நான் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் அதில் இருவருடைய ஆதரவை பெறுவதில்லை என முடிவெடுத்து இருந்தேன். அவர்கள் மீது நிதிமோசடி, மணல் கொள்ளை குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் ஒருவர் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக நேரடியாக என்னிடமும் எங்களுடைய கட்சித் தலைமை இடமும் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்களை கட்சியிலிருந்து விலக வேண்டுமென அப்பொழுதே கூறியிருந்தேன். அந்த இரண்டு உறுப்பினர்களையும் எமது அணியுடன் சேர்த்துக் கொள்வதில்லையென விலத்தி விட்டேன்.

தமிழ் தேசியத்துடன் பயணிக்கிறவர்களை எம்முடன் இணைத்துள்ளேன். தமிழ் தேசியத்தை சிதைக்கிற சக்திகள் தம்மால் முடிந்ததை செய்து பார்க்கட்டும். நானும் நீதிமன்றத்தில் பார்க்கிறேன்.

No comments

Note: Only a member of this blog may post a comment.