வவுனியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டாணிச்சூர் புளியங்குளம் கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்த கிராமத்தை முற்றாக தனிமைப்படுத்தி அங்கு பலருக்கு பிசிஆர் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
எங்களுக்கு கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்திலிருந்து பலர் வவுனியா நகரப் பகுதியில்- குறிப்பாக பஸார் வீதியிலே வர்த்தக நிலையங்களில் பணியாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு நேற்று காலை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் 204 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்துக்கு இந்த மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதன் முடிவுகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம். பரம்பலை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.