கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று வலியுறுத்தியது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகார பணியகம் வெளியிட்ட ருவிட்டர் குறிப்பில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையிலும், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.