யாழ் பல்கலைகழக மாணவனிற்கு கொரோனா: யாழில் பிரபல உணவகம் முடக்கப்பட்டது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழ் பல்கலைகழக மாணவனிற்கு கொரோனா: யாழில் பிரபல உணவகம் முடக்கப்பட்டது!

யாழ்.பருத்துறை வீதியில் வீரமாகாளியம்மன் கோவில் சுற்றாடலில் உள்ள உணவகம் ஒன்று சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதுளையை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவன் ஒருவன் மரண சடங்கிற்காக பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். இதற்கிடையில் குறித்த மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த மாணவனிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு, மருத்துவபீடத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 5ம் திகதி மாணவன் உணவு அருந்துவதற்காக குறித்த உணவகத்திற்கு வந்திருக்கின்றார்.

இது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் சென்றுவந்த இடங்களை உடனடியாக சுகாதார பிரிவு முற்றுகையிட்டு முடக்கி வருகின்றது. இதனடிப்படையில் குறித்த உணவகம் சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை குறித்த மாணவன் ஆனைக்கோட்டையில் ஒரு இடத்திற்கும் சென்றுவந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிந்துள்ள நிலையில் அதனையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவனுடன் ஒன்றாக இருந்த 4 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.