நாட்டில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், அமரர் அருணாசலம் குமாரதுரையின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.
நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும்.
இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.