Breaking News


முல்லைத்தீவு நகர்பகுதியில் பெறுமதியான புத்தர் சிலையினை வியாபாரத்திற்காக விற்கமுற்பட்ட ஹட்டனை சேர்ந்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.

பேஸ்புக் ஊடாக 06 கிலோ வெண்கல புத்தர் சிலையினை பவுண் சிலை என தெரிவித்து முல்லைத்தீவிற்கு கொண்டு வந்து விற்பனைக்கு முயன்றவேளை சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனை சேர்ந்த வாகனமும் அதன் சாரதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பிலான சட்டநடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Note: Only a member of this blog may post a comment.