யாழ்ப்பாணத்தில் இன்று இதுவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தில் இன்று 246 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பருத்தித்துறை புலோலியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும், சாவகச்சேரியை சேர்ந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.