நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (36) என்பவர், மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
இன்று காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்தவர், சாராய போத்தலை எடுத்து குடித்துள்ளார்.
அவரது வீட்டில் வர்ணப்பூச்சு வேலை நடந்து வருகிறது. இதற்கு பயன்படுத்தும் ரின்னரை, சாராயப் போத்தலிற்குள் விட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தெரியாமல் சாராயம் என நினைத்து அவர் பருகியுள்ளார்.
ரின்னரை பருகிய பின்னர் படுத்துள்ளார். நீண்டநேரமாகியும் அவர் எழுந்திருக்காததையடுத்து, மயக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் உயிரிழந்தார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.