Breaking News


யாழ்ப்பாண மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட் மீது அடுத்த வாரமளவில், யாழ் மாநகரசபை சார்பில் வழக்கு தொடர ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோத கட்டடம் கட்டிய குற்றச்சாட்டில், யாழ் மாநகரசபை சட்டத்தரணி வழக்கு தொடரவுள்ளார்.

முதல்வராக பதவி வகித்த காலத்தில், தனது அதிகாரத்தை பாவித்து இந்த விதிமீறலில் ஆர்னோல்ட் ஈடுபட்டிருந்தார். அப்போது, யாழ் மாநகரசபை சட்டத்தரணியாக இருந்த கனாதீபன் என்பவரும் சட்டவிரோதமாக கட்டடம் அமைத்திருந்தார். அது தவிர, மேலும் 9 பேர் சட்டவிரோதமாக கட்டடம் அமைத்தது கண்டறியப்பட்டது.

எனினும், முதல்வர் ஆர்னோல்ட் அவர்கள் மீது வழக்கு தொடர விடாமல் தடுத்து வைத்திருந்தார்.

வரவு செலவு திட்டத்தில் 3 முறை மண்கவ்விய பின்னர் அவரது பதவி வறிதாகியது. இதன் பின்னரே, மாநகரசபை சட்டத்தரணி மற்றும் 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போதும், முன்னாள் முதல்வர் மீது வழக்கு தொடரப்படவில்லை.

தற்போது, மணிவண்ணன் முதல்வராக பதவியேற்ற பின்னர், ஆர்னோல்ட் மீதான வழக்கு தொடரும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது வழக்கு தொடரப்படும் என தமிழ்பக்கம் அறிகிறது

No comments

Note: Only a member of this blog may post a comment.