வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் அரசியல்குழு இன்று (30) தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்வரும் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்தார்.
சீ.வீ.கே.சிவஞானம் அதை வழிமொழிந்தார்.
இதன்போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. குறிப்பாக சுமந்திரன் இதன்போது வாயே திறக்காமல் மௌனமாக இருந்தார்.
எதிர்ப்பின்றி அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
No comments
Note: Only a member of this blog may post a comment.