Breaking News

                                   கொரோனா தொற்றிற்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்புபட்டிருந்ததால், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.


பீரிஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திட்டம் மற்றும் இலங்கைக்கு தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்தும் நடந்த கூட்டத்திலும் கல்வி அமைச்சர் இன்று கலந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில், அண்மையில் ஹொரனவில் நடந்த டயர் தொழிற்சாலையின் தொடக்க விழாவில், தற்போது தொற்றிற்குள்ளான பியல் நிஷாந்தவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வு சில நாட்களின் முன்னர் நடந்ததால், அப்போதும் அவர் வைரஸ் தொற்றிற்குள்ளாகி, அறிகுறியற்றவராக இருந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் விமல் வீரவன்ச, மஹிந்தஅமரவீர, ரமேஷ் பத்திரண, ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் பலர் பங்கேற்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.