Breaking News


யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (27) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த இ.ஆர்னோல்ட் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனமையினால், பதவியிழந்தார். அதை தொடர்ந்து நடந்த புதிய முதல்வர் தெரிவில், எம்.ஏ.சுமந்திரன் எழுதிய திரைக்கதையில் வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

வி.மணிவண்ணன் இன்று தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.

வி.மணிவண்ணன் தரப்பின் 9 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 1 உறுப்பினர், ஈ.பி.டி.பியின் 11 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழர் தரப்பின் பிரதான கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, வி.மணிவண்ணனை முதல்வராக்க ஈ.பி.டி.பி ஆதரவு தெரிவித்தது.

இதனால், வரவு செலவு திட்டத்தில் ஈ.பி.டி.பி எதிராக வாக்களிக்காது. இதனால் 21 வாக்குகள், மணிவண்ணன் தரப்பிற்கு நிச்சயம் கிடைக்கும்.

இந்த தரப்புக்களை தவிர, எதிரணியில் 23 வாக்குகள் உள்ளன. முதல்வர் தெரிவை போல, இம்முறையும் சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் மறைமுக ஆதரவு வழங்கினால் அல்லது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தால் மாத்திரமே மணிவண்ணன் தரப்பு வெற்றிபெறும்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.