கோட்டா அரசின் மிலேச்சத்தனத்திற்கு எதிராக பல்கலையின் முன் குவியும் மக்கள்: பதற்றமான சூழல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கோட்டா அரசின் மிலேச்சத்தனத்திற்கு எதிராக பல்கலையின் முன் குவியும் மக்கள்: பதற்றமான சூழல்!யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை இடிக்கும் கோட்டாபய அரசின் மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைகழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் குவிய ஆரம்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக சூழலில் பெருமளவான பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலையில் மாணவர்கள் பல்கலைகழக சூழலை விட்டு வெளியேறியிருப்பார்கள் என்பதை கணக்கிட்டு, நீதிமன்ற உத்தரவை பெற்று, நினைவுத்தூபி இடிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைகழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளி வாயில் பூட்டப்பட்டுள்ளது.

அந்த பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.