Breaking News


யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக தமிழனமே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பல்கலைகழக மாணவர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

பல்கலைகழகத்திற்கு எதிரில் கூடியவர்களில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைந்தார்கள் என குறிப்பிட்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.